பக்கங்கள்

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

அஸ்ஸாம் கலவரம் - பிரச்சனை திசை திருப்பப்பட்டது - கல்கி இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி



நேரடியாகப் பிரச்சனைக்கு வருகிறேன். அஸ்ஸாமில் உள்ள வங்காள முஸ்லிம்கள் அனைவரும் ஊடுருவக்காரர்கள்களோ, சட்டவிரோதமாக குடியேறியவர்களோ அல்ல. அவர்கள் 100, 150 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு சென்று குடியேறியவர்கள். அதற்கென்று ஊடுருவல் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்றரை கொடி பேர் சட்ட விரோதமாக ஊடுருவி குடியேறி இருக்கிறார்கள் என்பது சங்பரிவாரின் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு. அவர்கள் அப்படி சொல்வது எல்லையை பாதுகாக்கும் நமது ராணுவத்தை களங்கப்படுத்துவது ஆகும். 1971 ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஆகதிகள் இந்தியாவுக்கு வந்தார்கள் என்பதும் இந்திரா காந்தி மனிதாபிமானத்தோடு அவர்களை அனுமதித்து மறுவாழ்வுக்கு உதவினார் என்பதும் வரலாற்று உண்மை. ஆனால் வழக்கம்போல பா.ஜ.க. கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு மக்களை குழப்புகிறது.

அஸ்ஸாமில் கலவரம் முக்கியமாக நடந்த கொக்ரஜ்ஹார் மாவட்டத்தையும் உள்ளடக்கி வாஜ்பாய் காலத்தில் போடோ டெரிடோரியல் கவுன்சில் அமைக்கப்பட்டது. ஆனால் 29 சதமே உள்ள போடோ பழங்குடியினர் பெரும்பான்மையாக இடம்பெறும் வகையில் அந்த கவுன்சில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக 71 சதவீதம் உள்ள போடோ அல்லாத மற்றவர்கள், அதிகாரம் பெற்ற போடோக்களால் தாக்கப்படுகிறார்கள். இந்த 72 சதவீதத்தினரில் குறைந்த சதவீததினர்தான் முஸ்லிம்கள். ஆனால் போடோக்கள் தாக்குவது முஸ்லிம்களைதான். இவர்கள் தனி நாடு கேட்டு போராடியபோது பயன்படுத்திய ஆயுதங்கள், கவுன்சில் அமைக்கப்பட்டு அரசியல் தீர்வு கண்டபோது பறிக்கப்படவில்லை.
எனவே போடோக்கள் கையில் நவான ஆயுதங்கள் சகஜமாக நடமாடுகின்றன. 

போடோ அல்லாத மற்றவர்களின் உயிரைப் பறித்து கலவரத்தை உருவாக்குவது அவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. தருண் கோகோய் தலைமையிலான மாநில காங்கிரஸ் அரசு ஒரு கையாலாகாத அரசாக இருக்கிறது. மத்திய அரசும் வேடிக்கை பார்க்கிறது. வோட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரான முஸ்லிம்களை தாஜா செய்யும் போக்கை காங்கிரஸ் கடைபிடிக்கிறது என்று குற்றம் சாட்டும் தார்மீக உரிமை சங்பரிவாருக்கு இல்லை. காரணம் அப்படி ஒரு குற்றச்சாட்டை திரும்ப திரும்ப சொல்லி, பெரும்பான்மையோரை வெறுப்பு ஏற்படச்செய்து, அவர்கள் வோட்டுக்களை பறிக்கும் வோட்டு வங்கி அரசியலைத்தான் பா.ஜ.க. கடைபிடித்திருக்கிறது.

அஸ்ஸாம் கலவரத்தை கண்டித்து மும்பையில் நடந்த கண்டன ஊர்வலத்தில் போலிஸ் சுட்டு இருவர் இறந்து போனார்கள். விஷமிகள் ஊடுருவியதால் அந்த ஊர்வலம் வன்முறை களமாகியது. அதற்குப் பிறகுதான் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வடகிழக்கு பகுதி மக்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்றார்கள். இட்டுக் கட்டப்பட்ட படங்களை
வலைதளங்களில் வெளியிட்டு இஸ்லாமியர்களால் பாகிஸ்தான் தூண்டி விட்டதால்தான் தொடர் விளைவாக வடகிழக்கு மாநிலத்தவர். உயிருக்குப் பயந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டதாக அரசு சொல்கிறது. இப்போது என்ன நடந்திருக்கிறது என்றல் அச்சாமிலும், மியான்மாரிலும் நடந்த முஸ்லிம் கோரப்படுகோலைகள் பின்னுக்கு மறைக்கப்பட்டு, பிரச்சனை திசை திரும்பி விட்டது. இது அரசாங்கமே செய்த சதியாகக் கூட இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது. யாரேனும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் இது போன்ற சதி செயலில் ஈடுபட்டிருந்தால் அது தேசத் துரோகம்தான்.

வதந்தி பரப்பும் அவதூறு செய்திகளை பரப்புவோர் இறந்த சகோதரனின் மாமிசத்தை தின்பதற்கு சமமாவார்கள் என்று நபி பெருமானார் சொல்லியிருக்கிறார். இன்று மூன்றரை லட்சம் முஸ்லிம்கள் உட்பட ஐந்து லட்சம் பேர் அஸ்ஸாமில் அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது போடோ அல்லாத மத்த சமூகத்தினருக்கு டெரிடோரியல் கவுன்சிலில் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும். போடோக்கள் கையில் உள்ள ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த மக்களை கருத்தில் கொண்டு வளர்ச்சித்திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

கல்கி: 2/9/2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக