
கூட்டத்தில், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்
காலிபணியிடத்தை நிரப்ப வேண்டும். கல்லூரி, பாலிடெக்னிக் படிக்கும்
சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டால்
மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக மின்
பற்றாக்குறைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஐதர்அலி, முகமது அதீன், சாதிக்பாட்ஷா, பஷீர் அகமது, ரியாத்அகமது
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவரணி செயலாளர் ஜாபர்அலி
வரவேற்றார். முகமது அனவி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக