பக்கங்கள்

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பெரம்பலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்


  அணிதிரள்வீர்!!!                      அணிதிரள்வீர்!!!                       அணிதிரள்வீர்!!!






                           கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து பெரம்பலூர்  மாவட்ட மனித நேய மக்கள் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேதி :   11-09-2012
நேரம் : மாலை  4.00 மணியளவில்
இடம்:   பெரம்பலூர்  புதிய பேருந்து நிலையம் எதிரில்

கூடங்குளத்தில் காந்திய வழியில் போராடி வரும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, பத்திரிக்கையாளர்களையும் தாக்கிய காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று 11-09-2012 மாலை 4..00 மணியளவில் பெரம்பலூர்  புதிய பேருந்து நிலையம் அருகில். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்  M.S.M    சுல்தான் மொய்தீன் தலைமையில் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

போராட்டக்களத்தில் மனிதநேய மக்கள் கட்சியினரின் உரிமை கோஷங்கள்....

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
கூடங்குளம் மக்கள் மீது
தாக்குதல் நடத்திய காவல்துறையை
வன்மையாக கண்டிக்கிறோம்....

குழந்தைகளையும் பெண்களையும்
வெறிகொண்டு தாக்குவதா?
மக்கள் உரிமைகளை நசுக்குவதா?
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
வன்மையாக கண்டிக்கிறோம்.....

பத்திரிக்கை தோழர்களை
கடுமையாகத் தாக்கிய
காவல்துறையை கண்டிக்கிறோம்....

மன்னிப்பு கேள் மன்னிப்பு கேள்
மக்களிடம் மன்னிப்பு கேள்...

அனுஉலையை காக்கும் அரசாங்கமே
மக்கள் உயிர்களை அழிக்கலாமா?

காந்தி பிறந்த தேசத்தில்
அகிம்சை வழியில் போராடும்
கூடங்குளம் மக்களை
அடக்கி ஒடுக்குவது அநியாயம்!

ஜனநாயக உரிமைகளை பறிக்காதே...
மக்கள் போராட்டங்களை ஒடுக்காதே....

வெல்லட்டும் வெல்லட்டும்
கூடங்குளம் மக்களின்
உரிமை போர் வெல்லட்டும்.....

தமிழக மக்களே... தமிழக மக்களே...
கூடங்குளம் மக்களின்
உரிமை போராட்டத்தை ஆதரிப்போம்.

அமைதி வேண்டும் அமைதி வேண்டும்
கூடங்குளம் மக்களுக்கு
அமைதி வேண்டும்....

வெளியேற்று வெளியேற்று
கூடங்குளம் பகுதியிலிருந்து
காவல்துறையை வெளியேற்று....

-- இவண்
மனிதநேய மக்கள் கட்சி
தமிழ்நாடு



புதன், 5 செப்டம்பர், 2012

நெல்லை ஏர்வாடியில் 'சுவனத்தை நோக்கி...' இஸ்லாமிய மகளிர் மாநாடு

 

நெல்லை ஏர்வாடியில் கடந்த 26.08.12 ஞாயிற்றுக்கிழமை அன்று தமுமுக மகளிர் அணி சர்பாக சுவனத்தை நோக்கி என்ற தலைப்பில் இஸ்லாமிய மகளிர் மாநாடு நடைபெற்றது. இது கிளை தலைவர் பக்ருதீன் அலி அஹமது தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் M. பர்வின் பாத்திமா ஆலிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கிளை துணை செயலாளர் P.பர்வின் பாத்திமா வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி M.L. முபாரக் மதனி, சகோதரி அஜ்ஹரா ஆலிமா மற்றும் சகோதரி பரக்கத் பதுருன் நிஷா ஆலிமா அகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஏர்வாடியை சேர்ந்த மாணவிகளும், ஆலிமாக்களும் உரையாற்றினர். ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். கிளை துணை செயலாளர் A.சேக் மும்தாஜ் பானு நன்றியுரை ஆற்றினர்

ராமநாதபுரம் பொதுக்கூட்டம் - வீடியோ தொகுப்பு




பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (சட்டமன்ற உறுப்பினர், இராமநாதபுரம்)





மவ்லவி ஜே.எஸ். ரிபாயி (தலைவர்,  தமுமுக-மமக




Ramnad Meeting Speech by Kovai Syed




திங்கள், 3 செப்டம்பர், 2012

மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்



01.09.2012 சனிக்கிழமை இராமநாதபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு மாபெரும் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் எம். சாதிக் பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ். ஜாஹிர் உசேன் வரவேற்புரையாற்றினார். தமுமுக மாவட்டச் செயலாளர் பி. அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், மாவட்ட துணை தலைவர் செய்யது காசிம் மரைக்காயர் மாவட்ட துணைச் செயலாளர்கள் வழக்குறைஞர் பாலகிருஷ்ணன், ஏ. சாதிக்குல் அமீன், கே. அப்துல் ரஹ்மான் மற்றும் கே. அஜிஸ் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக மாநிலச் செயலாளர் கோவை செய்யது, மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பு செயலாளர்களான மதுரை மைதீன், மன்னை செல்லசாமி, ஜோசப் நொலஸ்கோ, மருத்துவ அணிச் செயலாளர் ஜே. கிதிர் முகம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் பணிகள் மற்றும் சட்டமன்ற உரைகள் அடங்கிய சிறப்பு மலரை தலைவர் ஜே.எஸ்.ரிபாயி வெளியிட முதல் பிரதியை இராமநாதபுரம் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் பெற்றுக் கொண்டார். இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் நகர் தலைவர் சுல்தான் நன்றியுரை ஆற்றினார். ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பங்குக் கொண்ட இந்த பொதுக் கூட்டத்தில் மீனவர் வாழ்வுரிமை, சிறுபான்மையினர் நலன், ராமநாதபுரம் மாவட்ட நலன் மற்றும் பொதுவானவை என பின்வரும் தீர்மானங்கள் 30 நிறைவேற்றப்பட்டன:

மீனவர் வாழ்வுரிமை தொடர்பான தீர்மானங்கள்
தீர்மானம் எண் 01: கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்
இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒருபகுதியான கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்ததின் காரணமாக தமிழக மீனவர்களின் உடல், பொருள், ஆவி அனைத்தும் பறிபோகும் நிலை தினச்செய்தியாகவே மாறிவிட்டது. கச்சதீவை தாரை வார்த்து தமிழக மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்த மத்திய அரசு மீண்டும் கச்சத்தீவை மீட்டு இந்தியாவின்-தமிழகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும்.

தீர்மானம் எண் 02: இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது
இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை நிறுத்த முடியாது என கொலை வெறியோடு பேசியுள்ள மத்திய ராணுவ இணை அமைச்சரின் பேச்சை இப்பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தனது சொந்த நாட்டு மீனவர்களை நாள் தோறும் தாக்கும் அண்டை நாட்டு இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் வினோதம் உலகில் வேறு எந்த நாட்டிலும் நடைபெறுவதில்லை. மத்திய ராணுவ இணை அமைச்சர் தனது பேச்சுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மேலும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 03: இலங்கையிடமிருந்து இழப்பீடு பெற வேண்டும்
கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட, காயம்பட்டு ஊனமாகியுள்ள மீனவ குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டையும், சேதப்படுத்தப்பட்ட படகுகளுக்குரிய இழப்பீட்டையும் இலங்கை அரசிடமிருந்து பெற்று சம்பந்தப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு வழங்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. மேலும் இந்த கொலைபாதக செயல்களில் தொடர்புடைய இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை இந்தியாவுக்கு கொண்டுவந்து விசாரணை செய்ய தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் தமிழக மீனவர்களை பாதுகாக்க தமிழக அரசு மீனவர் பாதுகாப்பு படையை உடனே உருவாக்க வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 04: கடல் அட்டை மீதான தடையை நீக்குக
கடல் அட்டை மீதான மத்திய அரசின் தடை அர்த்தமற்றது என இப்பொதுக்கூட்டம் கருதுகிறது. எனவே பல்லாயிரம் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை இழக்கச் செய்யும் கடல் அட்டை மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வாக்களித்தது போல் கடல் அட்டை மீதான தடையை நீக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. சங்கு, சிப்பி மீதான தடையும் நீக்கப்பட வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 05: 21 தீவுகளில் மீன்பிடிக்கும் உரிமை
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளில் பாரம்பரியமாக நமது மீனவர்கள் தொழில் செய்து வந்தார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தின் காரணமாக 21 தீவுகள் பகுதிகளிலே 500 மீட்டர் சுற்றளவில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையினால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 தீவு பகுதியில் பாசி எடுக்கச் செல்லும் பெண்களும் கைதுச் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மீனவ மக்களின் பாரம்பரிய உரிமையை பறிக்கும் இத்தடை உடனடியாக நீக்கப்பட வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 06: சங்கு மீனவர்களின் உரிமை
1983 வரை கடல் சங்கு அரசுடைமையாக இருந்தது. அப்போது கடல் தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து கடலில் மூழ்கி எடுத்து வந்த சங்குகளை தமிழக அரசின் மீன்வளத்துறை குறைந்த விலை கொடுத்து கொள்முதல் செய்தது. இவ்வாறு வாங்கப்பட்ட சங்குகள் அரசின் பண்டகசாலைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த சங்குகளின் மதிப்பு தற்போதைய சந்தை நிலவரப்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை ஆகும். இந்த சங்குகளை விற்பனை செய்து அதில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை மேற்படி சங்குகளை கடலில் மூழ்கி எடுத்து வந்த கடல் தொழிலாளர்களுக்கு வழங்குவதன் மூலம் ஏழை கடல் தொழிலாளர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்த தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 07: தங்கச்சிமடத்தின் 5 மீனவர்களை மீட்க வேண்டும்
பொய் வழக்கு போடப்பட்டு கடந்த ஒன்பது மாதங்களாக இலங்கையில் சிறையில் வாடும் தங்கச்சிமடம் மீனவர்கள் ஐந்து பேரையும் விடுவிக்க வெளிவிவகார செயலாளரை இலங்கைக்கு அனுப்பி ராஜிய ரீதியான அழுத்தங்களை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 08: இறாலை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்
பல்வேறு சவாலான சூழல்களை நமது மீனவர்கள் சந்தித்து பிடித்து வரும் இறால் போன்ற கடல் உணவுக்கும் நியாயமான விலை கிடைக்காது தொழில் நசிவடையும் சூழல் நிலவுகிறது. எனவே தமிழக அரசு மீனவர்கள் மீது கருணை கொண்டு இறால் போன்ற ஏற்றுமதியாகும் கடல் உணவுப்பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்யவும், இறாலுக்கு குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயம் செய்யவும் உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

தீர்மானம் எண் 09: மீனவர்களை பழங்குடியினர் என அறிவிக்க வேண்டும்
மீனவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவும் வாழ்வு வளம் பெறவும் மத்திய அரசு தொலை நோக்கு திட்டங்களை வகுக்க வேண்டும். சாதி,மதம்,மொழி கடந்து அனைத்து மீனவர்களையும் மீனவ பழங்குடியினர் ஊழயளவயட வுசiடிந என அறிவிக்க வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 10 பாம்பன் தங்கச்சிமடம் இடையே தூண்டில் வளைவு
பாம்பன் தங்கச்சி மடம் கடற்பகுதிகளுக்கு இடையே வடக்கு கடலில் தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மண்டபத்தில் ஜெட்டி அருகே உள்ள பாறைகளை அப்புறப்படுத்தி அப்பகுதியை ஆழப்படுத்தி படகுகள் போக்குவரத்திற்கு வழிவகுக்க வேண்டுமென தமிழக அரசை இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

சிறுபான்மையினர் தொடர்பான தீர்மானங்கள்
தீர்மானம் எண் 11: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு
மத்திய அரசு நியமித்த நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான தேசிய மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான ஆணையம் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடும் இதர மதவழி சிறுபான்மையினருக்கு 5 விழுக்காடும் இட ஓதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இதே போல் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு செட்யூல்ட் இனத்தினருக்கான இடஒதுக்கீடு தொடர வேண்டுமென நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மிஸ்ரா ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரையை முழுமையாக மத்திய அரசு உடனே அமுல்படுத்த வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 12: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும்
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் தமிழகத்தில் வழங்கப்பட்டுவரும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. சட்டமன்ற தேர்தலின் போது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரித்துத் தரப்படுமென வாக்குறுதி அளித்தார். இவ்வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு 7 விழுக்காடாக உயர்த்தித் தரப்பட வேண்டுமென தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 13: இஸ்லாத்தை தழுவும் தலித் மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்
இஸ்லாத்தை தழுவும் தலித் சமூக மக்கள் செட்யூல்ட் இன மக்களுக்கான இடஒதுக்கீடு சலுகையை இழக்கும் நிலையில் அவர்களை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பட்டியலில் இணைத்து சாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது

தீர்மானம் எண் 14: டாம்கோ கடன் வட்டியில்லாமல் அளிக்க வேண்டும்
சிறுபான்மையினரின் தொழில் முன்னேற்றத்திற்காக வுயுஆஊழு மூலம் தொழிற்கடன் வழங்கப்படுகிறது. இக்கடன் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் மேலும் இக்கடனை வட்டியில்லா கடனாக வழங்கிட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 15: அஸாம் மியான்மார் 
கலவரங்கள்- மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
அஸாமில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கலவரங்கள் பெரும் கவலையை அளித்துள்ளன. இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டு மூன்றரை லட்சம் முஸ்லிம்கள் உட்பட 5 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இக்கலவரத்திற்கு காரணமான போடோ தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர்களிடம் உள்ள ஆயுதங்களை பறிக்கவும் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
மியான்மரில் வாழும் முஸ்லிம்கள் மீது நடைபெற்றுவரும் தொடர் வன்முறைகளை இப்பொதுக் கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. அக்கலவரங்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு மியான்மார் அரசுக்கு தேவையான நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
இராமநாதபுரம் மாவட்டம் தொடர்பான தீர்மானங்கள்

தீர்மானம் எண் 16: கீழக்கரை தனி தாலுக்கா
அரசு அறிவிப்போடு முடங்கிப்போன கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகாவை உருவாக்கும் ஆணையை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 17: இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் பாதாள சாக்கடை
இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மேற்கண்ட இரு நகராட்சிகளையும் தூய்மை பெற துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 18: இராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி
பின்தங்கிய பகுதியான இராமநாதபுரம் மாவட்ட மக்களின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரியை இராமநாதபுரத்தில் தொடங்கிட தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 19: ஆசிரியர் பணியிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டும்
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேனிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு ஆவணச் செய்ய வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 20: இராமநாதபுரத்தில் போக்குவரத்து உட்கோட்டம்
இராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்ட போக்குவரத்து மண்டலம் உருவாக்கிட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 21: பிளாஸ்டிகை தடைச் செய்வோம்
மண்வளம், நீர்வளம், கடல்வளம் ஆகியவற்றை பாழ்படுத்தி எதிர்கால சமூகம் வாழத் தகுதியற்றதாக இப்புவியை மாற்றிவரும் பிளாஸ்டிக் பொருட்களை எந்த வடிவத்திலும் பயன்படுத்த மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை இப்பொதுக்கூட்டம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. மேலும் மௌன அரக்கனான பிளாஸ்டிக்கை மாவட்டம் முழுவதும் தடை செய்ய மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை வேண்டும் என இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 22: குப்பைகளை அகற்ற நடவடிக்கை தேவை
மாவட்டம் முழுவதும் குப்பை, கழிவுநீர் போன்றவற்றால் நிரம்பி வழிகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் மழை காலத்தை கவனத்தில் கொண்டு முறையான குப்பை மேலாண்மையை மேற்கொள்ள மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொசு, பன்றி, வெறிநாய் தொல்லையும் மக்களை சிரமத்திற்குள்ளாக்குகிறது. இது விசயத்திலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 23: தங்கச்சிமடம் பாம்பன் பகுதியில் பட்டா
தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை காரணம் காட்டி பட்டா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தடையை நீக்கி பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 24: காட்டுநாயக்கர்கள் பழங்குடியினராக அறிவிக்கப்பட வேண்டும்
ராஜா கிழவன் சேதுபதி மன்னர் காலத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்தல் வாழ்ந்துவரும் பழங்குடியினரான காட்டுநாயக்கர்களை பழங்குடியினமாக அங்கீகரித்து சாதி சான்று வழங்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 25: இரயில்வே துறைக்கு கோரிக்கைகள்
இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்கும் பிரிவில் கூடுதல் பணியாளர்களை ரயில்வே நிர்வாகம் நியமிக்க வேண்டும்.
பரமக்குடி ரயில் நிலையத்தில் முன்பதிவு பிரிவு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் வகையில் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
இராமேஸ்வரம் - மதுரை இடையே பகல் நேரத்தில் கூடுதல் ரயில் விடப்பட வேண்டும்.
இராமேஸ்வரம் - திருப்பதி இடையே வாரத்தில் மூன்று முறை இயக்கப்படும் விரைவு வண்டி இரு மார்க்கங்களிலும் பாம்பன் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்
சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வரும் இரு விரைவு வண்டிகளும் இரு மார்க்கங்களிலும் உச்சிபுளி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும்
காரைக்குடி - தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து துவக்க வேண்டும்.
கொல்லம் - மதுரை இடையே இயக்கப்படும் ரயிலை இராமேஸ்வரம் வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
டெல்லியிலிருந்து மதுரை வரை வரும் சம்பத்கிராந்தி விரைவு வண்டி, குர்லாவிலிருந்து மதுரை வரும் விரைவு வண்டி மற்றும் ஹவ்ராவிலிருந்து திருச்சி வரும் விரைவு வண்டி ஆகிய ரயில்களை இராமேஸ்வரம் வரை நீடிக்கப்பட வேண்டும்
பாம்பன் ரயில் நிலையத்தை புதுப்பித்து அதே இடத்திலேயே தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்
சென்னையிலிருந்து இராமநாதபுரம் வரும் இரு விரைவு வண்டிகளும் காலை 9 மணிக்குள் இராமநாதபுரம் வரும் வகையில் கால அட்டவணை மாற்றப்பட வேண்டும்
ஆகிய இராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தென்னக ரயில்வே விரைந்து நடைமுறைப் படுத்த வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

பொதுவான தீர்மானங்கள்
தீர்மானம் எண் 26: அண்ணா பிறந்த நாளில் கைதிகள் விடுதலை
தண்டணைக் கைதிகளாக பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அனைத்து சிறைவாசிகளையும் அவர்கள் இதுவரை சிறையில் கழித்த காலத்தை தண்டணையாக கருதி செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என தமிழக முதல்வரை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 27: முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் சுதந்திரமான மது விற்பனையால் ஒரு தலைமுறையே குடிகார தலைமுறையாக உருவாகிவிட்டது. பள்ளி செல்லும் சிறுவன் கூட மதுக்குடிக்கும் அவலம் வந்து விட்டது. வளமான தமிழகம் உருவாக திட்டமிடும் தமிழக அரசு அதற்கு வழி வகுக்க அனைத்து மதுபானக்கடைகளையும் மூடுவதற்கு உடனே உத்தரவிட வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 28: கிரானைட் குவாரிகள் 
அரசுடமையாக்கப்பட வேண்டும்
கிரானைட் குவாரிகள் மூலம் தனியார் பல கோடி ரூபாய் சம்பாதித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். தனியார் குவாரிகள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் அதற்கு துணை போனவர்கள் அனைவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 29: காவேரிப் பிரச்னை தமிழகத்திற்கு நியாயம் வேண்டும்
காவேரியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தர கர்நாடகம் மறுக்கிறது. மத்திய அரசு தலையிட்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். காவிரி நடுவர் மன்றத்திற்கு தீர்ப்பாய தலைவர் இல்லாத நிலை உள்ளது. மத்திய அரசு உடனடியாக தீர்ப்பாய தலைவரை நியமிக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 30 மக்களை வாட்டும் மின் வெட்டு
தமிழக மக்களை தொடர்ந்து வாட்டி எடுக்கும் மின்வெட்டை குறைப்பதற்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மந்தமாகவே இருந்து வருகின்றன. இதனால் பலதரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். போர்கால அடிப்படையில் மின்வெட்டை முற்றிலும் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை




புனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாவின் அழைப்பினை ஏற்று ‘மக்கா உச்சி மாநாட்டு’க்கு வருகை தந்தனர்.

துருக்கியின் அப்துல்லா குல், எகிப்தின் டாக்டர் முஹம்மது முர்ஸி, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, ஈரானின் மஹ்மூத் அஹ்மத் நிஜாத், கத்தரின் அமீர் ஷேக் ஹமாத் பின் கலீபா அல்தானி, ஏமனின் அப்துரப் மன்சூர் ஹாதி, பலஸ்தீனத்தின் மஹ்மூத் அப்பாஸ், மலேசியாவின் நஜீப் ரஸாக், சூடானின் உமர் அல்பஷீர், ஆப்கானிஸ்தானின் ஹமீத் கர்சாய், துனிசியாவின் முன்செப் அல்மர்ஜுக்கி, பாகிஸ்தானின் ஆசிப் அலி சர்தாரி, பங்களாதேஷின் முஹம்மது ஜில்லுர் ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சமூகத்தின் பொதுப் பிரச்சினைகள் குறித்தும், முஸ்லிம் சமுதாயத்தை வேதனைக்குள்ளாக்கும் எரியும் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். சவூதி மன்னர் பாரம்பரிய முறையிலான பிரத்யேக உபசரிப்புகளுடன் இந்த சிறப்பு மாநாடு துவங்கியது.


அசாதாரணமான சூழலில் மக்காவில் அனைத் துலக இஸ்லாமியத் தலைவர்களும் கூடுவது இது இரண்டாவது தடவையாகும். 2005ஆம் ஆண்டில் மக்காவில் அவசரமாகக் கூட்டப்பட்டது. பல முஸ்லிம் நாடுகள் குழப்ப மேகங்களில் சிக்கி சிதிலமடைந்துள்ளன. குறிப்பாக சிரியாவில் நடைபெறுபவை எல்லாம் முடிவற்ற இருளான குகைப்பாதையாக நீண்டுகொண்டிருப்பதாக மன்னர் அப்துல்லா தமது உரையில் குறிப்பிட்டார். இதுபோன்ற நிலைகளைத் தவிர்க்க உலக முஸ்லிம் தலைவர்கள் ஒளிமயமான புதிய மாற்றத்திற்கு அடிகோல வேண்டும் என்றும் மன்னர் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
புனித காபா ஒளிவெள்ளத்தில் மிதக்க, ரமலான் 27ஆம் இரவில் நிலவில்லா அந்த இரவில் மக்காவின் மணிக்கூண்டின் பச்சை விளக்குகள் ஒளிர, அந்த மலைநகரத்தில் அல்சஃபா அரண்மனையில் மன்னர் அப்துல்லாவின் கோரிக் கைக்கு ‘அல்லாஹு அக்பர்’ என பலமுறை முழங்கி தங்கள் ஆதரவை உலகத் தலைவர்கள் வெளிப்படுத்தினர். தராவீஹ் என்ற இரவுத் தொழுகைக்குப் பிறகு தமது சிறப்புரையை மன்னர் அப்துல்லா தொடர்வார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், அவரது உரையின் பிரதிகள் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த செய்தியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. உலக முஸ்லிம் தலைவர்கள் இடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவரும் தங்களது வேற்றுமைகளை மறந்து ஓரிறையின் உத்தரவுப்படி புனித காபாவில் தொழுகையில் ஒன்றுபட்டனர். சிரியா, பலஸ்தீன், மியான்மர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு வேண்டி உருக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டனர் உலகத் தலைவர்கள்.
ஜித்தா மக்கா எக்ஸ்பிரஸ்வே முழுவதுமாக மூடப்பட்டது. பிரத்யேக பாதுகாப்பு வளை யங்கள் அமைக்கப்பட்டது. உலகத் தலைவர்களும், நாடுகளின் பிரதிநிதிகளும் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொரு மின் சாதனங்களும் தீவிரமாக சோதனை இடப்பட்டன. இந்த உச்சி மாநாட்டின் ஏற்பாடு களை செய்துவந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி) தங்களது 57 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முழுமையாக கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளது. சிரியா தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப் பட்ட போது உச்சி மாநாட்டில் சிறிது பரபரப்பு நிலவியது. எனினும் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத், சிரியாவுக்கு ஆதரவான நிலையை வலியுறுத்தி உரையாற்றினார்.
சிரியாவின் அதிபருக்காகப் பரிந்து பேசுவதை விட்டுவிட்டு கொஞ்சம் சிரியாவின் மக்களை நினைத்துப் பாருங்கள் என தனது வழக்கமான திரிபுவாதத்தை அமெரிக்கா இந்த உச்சிமாநாட்டில் வைத்தது. ஓ.ஐ.சி.யின் சிறப்பு அழைப்பாளராக, அமெரிக்காவின் பிரதிநிதியாகப் பங்கேற்ற ரஷாத் ஹுஸைன் இதனைத் தெரிவித்தார். ஈரான் அதிபர் நிஜார், சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா, கத்தர், துருக்கி ஆகிய நாடுகள் மறைமுகமாக ஆயுதம் வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். சிரியாவை முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி.யை விட்டு விலக்கும் முடிவிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சாலிஹ் கண்டனம் தெரிவித்தார்.
ஆனால் ஈரான் கோரிக்கை ஓ.ஐ.சி.யினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், மியான்மரில் நிகழும் முஸ்லிம் இன அழிப்பு குறித்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ரோஹின்கியா முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்கியவர்கள் மீது கடுமையான விசாரணை களும், நடவடிக்கைகளும் தேவை என மக்கா உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. உலக அளவில் மிக மோசமாக ஒடுக்கப்படும் மக்களை மீட்க மியான்மர் அரசு உடனடியாக வன்முறையாளர்களை தண்டிக்க தயங்கக்கூடாது. நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். நிவாரண உதவிகளை வழங்க விரும்புவோரைத் தடுக்கக்கூடாது. ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்க மியான்மர் அரசு முன்வர வேண்டும் என மக்கா உச்சி மாநாடு கேட்டுக் கொண்டது.
முஸ்லிம் நாடுகள் ஒன்று திரண்டதன் எதிரொலியாக மியான்மர் பௌத்த மதவெறி அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் நிவாரண உதவிகளை அனுமதிக்கத் துவங்கியுள்ளது. துருக்கிய அரசு பெருமளவு நிவாரணங்களை தனது வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைமையில் அனுப்பிவைத்தது. அந்த நிவாரணக் குழுவில் முக்கிய உறுப்பினராகப் பங்கேற்ற துருக்கியப் பிரதமர் ரஜப் தய்யிப் எர்தோகனின் மனைவி ரோஹிங்கிய முஸ்லிம்களின் துயர நிலை கண்டு கண்ணீர்விட்டுக் கதறினார். இது ரத்தம் குடிக்கும் பௌத்தம் பற்றி உலகின் கண்ணோட்டத்தை பறைசாற்றியது. முஸ்லிம் உலகம் தனது நீடு துயிலைக் கலைத்து சோம்பல் முறித்து புறப்பட்டு விட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

--அபுசாலிஹ் tmmk.info

இந்திய முஸ்லிம்கள் மீது வெறுப்பை வளர்க்கும் ஊடக வன்முறை - தினமணிக்கு தமுமுக பதிலடி



                               பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் அங்குள்ள சிறுபான்மையினரான இந்துக்கள் மிகவும் கொடுமைக்குள்ளாகி வருவதாக இங்கு பல ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் சிறுபான்மையினருக்குப் பரிதாபப்படும் போர்வையில் இந்திய முஸ்லிம்கள் மீது விஷத்தைக் கக்கி வெறுப்பை விதைக்கும் வேலையை சில பத்திரிகை பாசிசவாதிகள் செய்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு தினத்தந்தி நாளேடு இத்தகைய விஷமக் கருத்தைத் தலையங்கமாக தீட்டியது.
உச்சக்கட்ட வெறியை உமிழ்ந்திருந்த அந்தத் தலையங்கத்திற்கு தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ மறுப்பு அனுப்பியும் தினத்தந்தி அதனை வெளியிடாமல் அடாவடித்தனம் காட்டியது.
16.08.2012 தேதியிட்ட தினமணி நாளேடும் அதே தொனியில் ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது. பின்வரும் மறுப்பை மாநிலச் செயலாளர் பேரா. முனைவர் ஜெ. ஹாஜாகனி அனுப்பி பிறகு, தினமணி ஆசிரியர் வைத்தியநாதனுடன் விவரத்தைத் தெரிவித்தார். தலைமைக்கழகப் பேச்சாளர் என்.ஏ.தைமிய்யாவும் தொலைபேசியில் தினமணி ஆசிரியருடன் பேசியுள்ளார். ‘இஸ்லாமிய நாடுகளிடம் மனித உரிமையை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது’ என்ற தினமணியின் தலையங்க வரிக்கு அதன் ஆசிரியரிடம் தொலைபேசியில் கண்டனம் தெரிவித்தபோது, ‘பாகிஸ்தானும், வங்கதேசமும் தம்மை இஸ்லாமியக் குடியரசு நாடு என்று குறிப்பிடுவது தவறா?’ என்றார்.
‘இஸ்லாமியா நாடு என்று குறிப்பிடுவது இஸ்லாமியக் கொள்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்தும் நாட்டையே குறிக்கும், கந்தசாமி தவறு செய்தார் என்பதற்கும், கந்தசாமி என்ற இந்து தவறு செய்தார் என்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இதில் மத அடையாளத்தை வலிந்து குறிப்பிடுவது அவசியமற்றது என்பதைத் தெரிவித்தோம். நமது மறுப்பை நடுநிலைப் பத்திரிகை எனக் கூறிக்கொள்ளும் தினமணி வெளியிடுமோ தெரியாது. இது சமுதாயத்தின் கவனத்திற்காக... ‘‘தினமணி 16.08.2012 தேதியிட்ட ‘இப்படிச் செய்தால் என்ன?’ என்ற தலையங்கம் படித்து மிகவும் மனவேதனை அடைந்தோம்.
சுதந்திரம் கிடைத்த வேளையில் பாகிஸ்தான் பிரிகிறது. அப்போது இந்திய முஸ்லிம்களுக்குத் தகைமைசால் தலைமைதந்த தமிழர் காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிபிடம், முஹம்மதலி ஜின்னா ‘‘இந்திய முஸ்லிம்களுக்கு நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும்?’’ என்று கேட்கிறார். அதற்கு ‘‘பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் கண்ணியமாக நடத்துவது மட்டுமே இந்திய முஸ்லிம்களுக்கு நீங்கள் செய்கிற உதவியாகும்’’ என்று பதிலுரைத்தார் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப்.
பாகிஸ்தானிலோ அல்லது வங்கதேசத்திலோ சிறுபான்மை இந்து கிறிஸ்துவ மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஒட்டுமொத்த இந்தியர்களும் அதைக்கண்டிக்க வேண்டும்; இதில் மதபேதங்கள் பார்க்கத் தேவையில்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அரசுகள் ஒப்புக்கொள்ள மறுத்துவருவதால் சார்புகளற்ற, சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் மூலம் உண்மைநிலை கண்டறியப்படவேண்டும். இதற்காக இந்திய முஸ்லிம்களும் அதற்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேநேரம், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் சிறுபான்மை இந்துக்களுக்கு பாதிப்பு என்ற செய்தியை எழுதும்போதெல்லாம், இந்திய முஸ்லிம்கள் சகல சவுகரியங்களுடன் சொர்க்கலோகத்தில் வாழ்வதுபோல சித்தரித்து எழுவதும், அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிபடுவதற்குக் காரணம் அவை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளாக இருப்பதும்தான் என்ற விஷ(ம)க் கருத்தை ஊடகங்கள் விதைக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்திய இந்துக்கள் இதற்கு எதிராகப் பெ??? வேண்டும் என மிக அநாகரீகமாக ஒரு முன்னணி தமிழ்நாளேடு (தினத்தந்தி) தலையங்கம் தீட்டியது.
சான்றாண்மை மிக்க தினமணியின் தலையங்கத்திலும் அந்த சாயல் ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. தங்கள் தலையங்கத்தில், ‘‘ஒரு நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்கும்வரை சிறுபான்மையினருக்கு சட்டத்தின் பாதுகாப்பு முழுமையாகக் கிடைக்கும். அவர்கள் உடைமைக்கும், மதச் சடங்குகளுக்கும் பாதகம் ஏற்படாது என்பதற்கு இந்தியா மட்டுமே உதாரணமாகத் திகழ்கிறது. அங்குமிங்குமாக சில தவறுகள் நடந்தாலும் பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் நடத்தப்படுவதுபோல, இந்தியாவில் சிறுபான்மையினர் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதில்லை. பாபர்மசூதி இடிப்புக்குப் பிறகு சிறுபான்மையினருக்கு மேலதிகமான கவனமும் சலுகைகளும் தரப்பட்டன.’’ என்று எழுதியுள்ளீர்கள். இது சரிதானா?
‘பால் ஆர் ப்ராஸ்’ என்ற ஆய்வாளர் இந்திய நாட்டில் 1961லிருந்து நடைபெற்று வந்த இந்து முஸ்லிம் கலவரங்களை ஆய்வு செய்து இக்கால இந்தியாவின் கூட்டு வன்முறையின் வடிவங்கள், கலவரங்கள் மற்றும் இனப்படுகொலைகள் என்ற நூலை எழுதியுள்ளார். போர்க்குணத்தோடு வளர்த்தெடுக்கப்பட்ட இந்துத்துவ இயக்கங்கள், மிகுந்த திட்டமிடலோடும் ஒருங்கிணைப்போடும் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதையும், உயிர், உடைமை, உரிமை சிதைக்கப்படுவதையும் அந்நூலில் புள்ளி விவரங்களோடு தெளிவுபடுத்தியுள்ளார். சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதல்ல; அன்றாடம் நடக்கின்றன. இது உண்மை.
சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என ஏட்டில் எழுதியிருந்தாலும், நாட்டின் நிகழ்வுகள் முஸ்லிம்கள் நாலாந்தரக் குடிமக்களாய் நடத்தப்பட்டு வருவதை பிரதிபலிக்கின்றன. அமெரிக்கச் சிறைகளில் கருப்பர்கள் அதிகமாக இருப்பது போல இந்தியச் சிறைகளில் குரலற்ற முஸ்லிம் சமுதாயத்தினர்தான் கூட்டங்கூட்டமாக அடைக்கப்பட்டுள்ளனர். 16 ஆண்டுகள் கழித்து, குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் இழந்துவிட்ட வாழ்நாளை யார் திருப்பித் தருவார்கள்?
முஸ்லிம்களின் காவலர் எனக் கூறிக்கொள்ளும் திமுக ஆட்சியும் அண்ணா பிறந்த நாளையொட்டி கைதிகள் விடுவிக்கப்படும் போது கூட முஸ்லிம் கைதிகள் ஓரவஞ்சனை செய்யப்பட்டனரே. பாகல்பூர், மீரட், பீவண்டி, மொராதாபாத், அலிகர், மும்பை, ஜாம்ஷெட்பூர், பனாரஸ், குஜராத் என நாடெங்கும் நடந்துள்ள கலவரங்களில் பலியான முஸ்லிம்களுக்கும், இருப்பிடங்கள், உடமைகளை, இழந்தவர்களுக்கும் இதுவரை நீதி கிடைத்தபாடில்லை.
நீதிபதிகள் ஸ்ரீகிருஷ்ணா, பரேக், வாத்வா, ஜக்மோகன் ரெட்டி, டி.பி.மதன், லிபரான், என எத்தனையோ நீதியரசர்கள் கலவரத்தின் காரணகர்த்தர்களை பெயர் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டியும் கூட எவரும் தண்டிக்கப்பட வில்லையே.
ஆனால் தக்க காரணமின்றி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் சிறைக் கொட்டடியில் உள்ளனரே இதுதான் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதா?
உலகிலேயே அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கின்ற இந்தியாவில் அவர்களின் சமூக, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்த நீதிபதி ராஜீந்தர் சச்சாரின் அறிக்கை சகோதர தலித் சமுதாய மக்களைவிட மிக மிகப் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் இருப்பதாகக் கூறி முஸ்லிம்களின் நிலையைத் துல்லியமாகப் பிடித்துக் காட்டியது. மக்கள்தொகையில் 20 விழுக்காடு வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளில் 3 விழுக்காடாகவும், நீதித்துறையில் 4 விழுக்காடாகவும் தான் உள்ளது. ஐதராபாத்திலும், செகந்திரபாத்திலும் ரிக்ஷா தொழிலாளர்களிடம் ‘செட்விண்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 50 ஆயிரம் ரிக்ஷா தொழிலாளிகளில் 70 விழுக்காடு முஸ்லிம்கள் என தெரிவித்தது. தலைநகர் டெல்லியில் நடைபாதைவாசிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்களே.
இந்திய நாட்டை நீண்ட நெடுங்காலம் முஸ்லிம் காவலராக தன்னைக் காட்டிக் கொள்ளும் காங்கிரசும் அதன் கூட்டணியும்தான் ஆண்டுள்ளது. ஆயினும் முஸ்லிம் சமுதாயத்திற்கு இந்த அவல நிலை என்றால், உண்மையில் எந்த சக்தி இந்த நாட்டை ஆள்கிறது என்பதை ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்பது நீங்கள் எழுதியிருப்பது போல, இனிமையானதாக இல்லை. அதற்காக பாகிஸ்தானிலும், வங்கத்திலும் சிறுபான்மை இந்துக்கள், கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் சரிகாணவில்லை, பாகிஸ்தானிலும், வங்கத்திலும் சிறுபான்மை இந்து, கிறிஸ்தவ மக்களுக்காக, இலங்கையில் சிறுபான்மையினரான அனைத்து மதத் தமிழர்களுக்காக, இந்திய அரசாங்கம் மிக வலிமையான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கு இந்திய முஸ்லிம்கள் யாரையும் விட ஒருபடி மேலாக தங்கள் ஆதரவைத் தருவார்கள்.
அதேநேரம், இந்தியாவில் முஸ்லிம்கள் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள், பாகிஸ்தானில் இந்துக்கள் நரகத்தில் வாடுகிறார்கள் என்பன போன்ற ஒப்பீடுகளை இங்குள்ள முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் தினமணி போன்ற பாரம்பரியமும், நடுவுநிலையும் உள்ள ஏடுகள் செய்யக்கூடாது என்பதை உரிமையோடு வலியுறுத்துகிறோம்.’’

-TMMK.INFO

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையின முஸ்லிம் இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் -இராமநாதபுரம் (கிழக்கு)

 


இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையின முஸ்லிம் இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: சந்தை திடல், இராமநாதபுரம் காலம்: செப்டம்பர் 1 சனி மாலை 5.30 தலைமை: சாதிக் பாஷா (தலைவர், மமக இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் சிறப்புரை: மவ்லவி ஜே.எஸ். ரிபாயி (தலைவர், மமக) பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்) கோவை செய்யது (மாநில செயலாளர், தமுமுக) மைதீன் உலவி (மாநில அமைப்பு செயலாளர், மமக) ஜோசப் நொலஸ்கோ (மாநில அமைப்பு செயலாளர், மமக) மன்னை செல்லச்சாமி (மாநில அமைப்பு செயலாளர், மமக) கிதிர் முஹம்மது (மருத்துவ அணி மாநில செயலாளர், தமுமுக)

      

   

     

         

     

        

   



அஸ்ஸாம் கலவரம் - பிரச்சனை திசை திருப்பப்பட்டது - கல்கி இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி



நேரடியாகப் பிரச்சனைக்கு வருகிறேன். அஸ்ஸாமில் உள்ள வங்காள முஸ்லிம்கள் அனைவரும் ஊடுருவக்காரர்கள்களோ, சட்டவிரோதமாக குடியேறியவர்களோ அல்ல. அவர்கள் 100, 150 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு சென்று குடியேறியவர்கள். அதற்கென்று ஊடுருவல் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்றரை கொடி பேர் சட்ட விரோதமாக ஊடுருவி குடியேறி இருக்கிறார்கள் என்பது சங்பரிவாரின் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு. அவர்கள் அப்படி சொல்வது எல்லையை பாதுகாக்கும் நமது ராணுவத்தை களங்கப்படுத்துவது ஆகும். 1971 ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஆகதிகள் இந்தியாவுக்கு வந்தார்கள் என்பதும் இந்திரா காந்தி மனிதாபிமானத்தோடு அவர்களை அனுமதித்து மறுவாழ்வுக்கு உதவினார் என்பதும் வரலாற்று உண்மை. ஆனால் வழக்கம்போல பா.ஜ.க. கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு மக்களை குழப்புகிறது.

அஸ்ஸாமில் கலவரம் முக்கியமாக நடந்த கொக்ரஜ்ஹார் மாவட்டத்தையும் உள்ளடக்கி வாஜ்பாய் காலத்தில் போடோ டெரிடோரியல் கவுன்சில் அமைக்கப்பட்டது. ஆனால் 29 சதமே உள்ள போடோ பழங்குடியினர் பெரும்பான்மையாக இடம்பெறும் வகையில் அந்த கவுன்சில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக 71 சதவீதம் உள்ள போடோ அல்லாத மற்றவர்கள், அதிகாரம் பெற்ற போடோக்களால் தாக்கப்படுகிறார்கள். இந்த 72 சதவீதத்தினரில் குறைந்த சதவீததினர்தான் முஸ்லிம்கள். ஆனால் போடோக்கள் தாக்குவது முஸ்லிம்களைதான். இவர்கள் தனி நாடு கேட்டு போராடியபோது பயன்படுத்திய ஆயுதங்கள், கவுன்சில் அமைக்கப்பட்டு அரசியல் தீர்வு கண்டபோது பறிக்கப்படவில்லை.
எனவே போடோக்கள் கையில் நவான ஆயுதங்கள் சகஜமாக நடமாடுகின்றன. 

போடோ அல்லாத மற்றவர்களின் உயிரைப் பறித்து கலவரத்தை உருவாக்குவது அவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. தருண் கோகோய் தலைமையிலான மாநில காங்கிரஸ் அரசு ஒரு கையாலாகாத அரசாக இருக்கிறது. மத்திய அரசும் வேடிக்கை பார்க்கிறது. வோட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரான முஸ்லிம்களை தாஜா செய்யும் போக்கை காங்கிரஸ் கடைபிடிக்கிறது என்று குற்றம் சாட்டும் தார்மீக உரிமை சங்பரிவாருக்கு இல்லை. காரணம் அப்படி ஒரு குற்றச்சாட்டை திரும்ப திரும்ப சொல்லி, பெரும்பான்மையோரை வெறுப்பு ஏற்படச்செய்து, அவர்கள் வோட்டுக்களை பறிக்கும் வோட்டு வங்கி அரசியலைத்தான் பா.ஜ.க. கடைபிடித்திருக்கிறது.

அஸ்ஸாம் கலவரத்தை கண்டித்து மும்பையில் நடந்த கண்டன ஊர்வலத்தில் போலிஸ் சுட்டு இருவர் இறந்து போனார்கள். விஷமிகள் ஊடுருவியதால் அந்த ஊர்வலம் வன்முறை களமாகியது. அதற்குப் பிறகுதான் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வடகிழக்கு பகுதி மக்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்றார்கள். இட்டுக் கட்டப்பட்ட படங்களை
வலைதளங்களில் வெளியிட்டு இஸ்லாமியர்களால் பாகிஸ்தான் தூண்டி விட்டதால்தான் தொடர் விளைவாக வடகிழக்கு மாநிலத்தவர். உயிருக்குப் பயந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டதாக அரசு சொல்கிறது. இப்போது என்ன நடந்திருக்கிறது என்றல் அச்சாமிலும், மியான்மாரிலும் நடந்த முஸ்லிம் கோரப்படுகோலைகள் பின்னுக்கு மறைக்கப்பட்டு, பிரச்சனை திசை திரும்பி விட்டது. இது அரசாங்கமே செய்த சதியாகக் கூட இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது. யாரேனும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் இது போன்ற சதி செயலில் ஈடுபட்டிருந்தால் அது தேசத் துரோகம்தான்.

வதந்தி பரப்பும் அவதூறு செய்திகளை பரப்புவோர் இறந்த சகோதரனின் மாமிசத்தை தின்பதற்கு சமமாவார்கள் என்று நபி பெருமானார் சொல்லியிருக்கிறார். இன்று மூன்றரை லட்சம் முஸ்லிம்கள் உட்பட ஐந்து லட்சம் பேர் அஸ்ஸாமில் அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது போடோ அல்லாத மத்த சமூகத்தினருக்கு டெரிடோரியல் கவுன்சிலில் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும். போடோக்கள் கையில் உள்ள ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த மக்களை கருத்தில் கொண்டு வளர்ச்சித்திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

கல்கி: 2/9/2012