பக்கங்கள்

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

குவைத்தில் பொய் வழக்கில் தமிழர் பரிதவிப்பு !



தமிழ் நாட்டை சேர்ந்த கே .பாண்டியன் ,தகப்பனார் பெயர் கிருஷ்ண மூர்த்தி மங்க நல்லூர் போஸ்ட் ,கொடு வெட்டி கிராமத்தை (மாயவரம் -நாகை)சேர்ந்தவர் இவர் குவைத் நாட்டிற்கு லேபர் வேலைக்காக நாற்பது தினார் சம்பளத்திற்கு 1998 ஆம் வருடம் வந்துள்ளார் ,எந்த பிரச்னையும் இல்லாமல் நல்ல முறையில் வேலை செய்து வந்துள்ளார் .தமிழகத்தை சேர்ந்த மும்பையை பூர்விகமாக வாழும் சுரேஷ் கோபி என்பவன் மூலம் பிரச்சனை வந்தது ,சுரேஷ் கோபி குவைத்தில் தான் பணியாற்றி வந்துள்ளான் .இவன் பாண்டியன் அவர்களை பார் டைம் வேலைக்கு 2010 அன்று ஒரு இடத்திற்கு வேலைக்கு அழைத்து சென்றுள்ளான்.
 அவனுக்கு அந்த கம்பெனியில் ஏதோ பிரச்னை இருந்துள்ளது இது தெரியாமல் பாண்டியன் சென்று விட அந்த கம்பெனியில் சுரேசுடன் வந்த இரண்டு பேரிடமும் அடையாள அட்டையை ஜெராக்ஸ் எடுத்து கொண்டு திருப்பி கொடுத்து விடுகின்றனர் கம்பெனி நிர்வாகத்தினர் அப்போது ஏன் எதற்கு
என கேட்க ஒரு பிரச்னையும் இல்லை என அந்த கம்பெனி நிர்வாகம் கூறி விடுகிறது. இரண்டு வருடம் சென்று விடுகிறது கடந்த (2012) மூன்று மாதத்திற்கு முன்பு பாண்டியனின் குடியுரிமை முடிந்து விட அதனை புதுப்பிக்க அவரது கம்பெனி நிர்வாகம் செல்லும் போது அங்கு பாண்டியன் மீது ஏற்க்கனவே பார் டைம் வேலைக்கு சென்ற அந்த கம்பெனி சுரேஷ் கோபி ,அப்துல் முத்தலிப் மற்றும் பாண்டியன் மீது திருட்டு வழக்கு பதிந்துள்ளது தெரிய வந்தது இதில் வேடிக்கை என்னவென்றால் யார் பாண்டியனை பார் டைம் வேலைக்கு அழைத்து சென்றாரோ அந்த கோபி ஊருக்கு சென்று விட்டான் பாண்டியனோடு வேலைக்கு சென்ற அப்துலும் ஊருக்கு சென்று விட்டனர் இப்போது இவர் மட்டும் மாட்டிக் கொண்டார்.இந்த விஷயம் குவைத் தமுமுக வின் கவனத்திற்கு தமுமுகவின் மீது நல்ல அபிப்பிராயம் உள்ள தஞ்சை யை சேர்ந்த ஆனந்த் அவர்கள் கொண்டு வந்தார் உடனடியாக களத்தில் இறங்கிய குவைத் தமுமுக பாதிக்கப்பட்ட சகோதரர் பாண்டியன் அவர்களை நேரில் சென்று சந்தித்து நடந்த உண்மைமையை தெரிந்து கொண்டனர் எந்த தவறும் செய்யாத பாண்டியனை மீட்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அனைத்து உதவிகளும் செய்து வருகிறது -மேலும் தமிழக தமுமுக தலைமை மூலமும் நாகை மாவட்ட தமுமுக மூலமும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க குவைத் தமுமுக தயாராகி வருகிறது.
 
படத்தில் நடுவில் இருப்பவர் பாதிக்கப்பட்ட பாண்டியன் உடன் இருப்பவர்கள் மண்டல அமைப்பு செயலாளர் பாண்டிசேரி அலாவுதீன் ,மற்றும் மக்கள் தொடர்பு &மீடியா செயலாளர் நெல்லை பீர் மரைக்காயர் 
 
-குவைத் தமுமுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக