வி.களத்தூர் கிளையில் தமுமுக வின் மாணவர் இந்தியா துவங்கப்பட்டது. இந்த
கூட்டத்திற்கு வி.களத்தூர் தமுமுக மற்றும் மமக வின் ஒருங்கிணைந்த
கிளைத்தலைவர் எம். சபியுல்லாஹ், துணைத்தலைவர் கலீல் மாவட்ட மமக வின் துணைச்
செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் இந்த மாணவர்
இந்தியாவைப்பற்றி சொல்லப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு 30 மாணவர்கள்
கலந்துக்கொண்டனர்.
மேற்கண்ட கூட்டத்தில் மாணவர்களின் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
அதில் அவர்கள் கூறிய பிரச்சனைகளில் முக்கியமாக வி.களத்தூர் அரசு
மேல்நிலைப்பள்ளியில் உள்ள குடி நீர் தொட்டியை சுத்தம் செய்ய சொல்வது
என்றும் மாணவ மாணவிகளின் கழிப்பிட அறையில் தண்ணீர் வசதிகளை செய்து தர
சொல்வது என்றும் மேலும் பெண்கள் நடுநிலைப்பள்ளியில் கழிப்பிட வசதி செய்து
தர சொல்லி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று
தீர்மானிக்கப்பட்டது.
வி.களத்தூரின் மாணவர் இந்தியா பிரிவிற்கு செயலாளராக பி. சாகுல் ரியாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டோஸ் மற்றும் செய்தி - சபி - கலீல்
- vkalathurpost
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக