பக்கங்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றி

                                     தமுமுக மற்றும் மமக வின் வி.களத்தூர் கிளையின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் இளம்பை. இரா தமிழ் செல்வன்  M.A., அவர்களுக்கு நன்றி கூறி பொன்னாடை போர்த்தப்பட்டது.
வி.களத்தூர் கிளையின் தமுமுக மற்றும் மமக வின் ஒருங்கிணைந்த தலைவர் T.R.M. சபியுல்லாஹ் இதைப்பற்றி கூறும் போது அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறை வசதி மற்றும் நீர் வசதி மற்றும் சுகாதாரமான குடிநீர் தேக்கத் தொட்டியும் அமைத்து தரவேண்டி நமது தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அவர்களிடம் தமுமுக மற்றும் மமக வின் சார்பாக கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ அவர்கள் தமது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் ஒதுக்கி தருவதாக எற்றுக் கொண்டுள்ளார். அதற்கு நன்றி கூறும் முகமாக சட்ட மன்ற உறுப்பினர் பார்த்து வந்தோம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு கிளையின் சார்பாக பொருப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். தமுமுக வின் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சகோதரர் A. சாதிக் பாஷா எம்.எல்.ஏ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.




தகவல் - கலீல்
-vkalathurpost 

வி.களத்தூர் தமுமுக வினர் நடத்திய இப்தார் நிகழ்ச்சி

                              29.07.2012 அன்று வி.களத்தூர், மில்லத் நகர் மற்றும் மேற்கு நூர் பள்ளிவாசலிலும் தமுமுக மற்றும் மமக சார்பாக இப்தாருக்கு (நோன்பு திறப்பதற்கு) ஜூஸ் வழங்கப்பட்டது.

வி.களத்தூர் ஜாமியா மஸ்ஜிதில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் நாட்டாண்மை ஜனாப் T.S.E லியாக்கத் அலி முன்னிலையில் பழச்சாறு வழங்கப்பட்டது.

மில்லத் நகர் பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவர் ஜனாப் P. ஜாபர் அலி முன்னிலையில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் பழச்சாறு வழங்கினார்கள். மில்லத்நகர் மேற்கு நூர் பள்ளியில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் பழச்சாறு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட மமக செயலாளர் A. முஹம்மது சித்தீக், வேப்பந்தட்டை ஒன்றிய பொருளாளர் A. சாதிக் பாஷா, பெரம்பலூர் மாவட்ட மாணவர் இந்தியா தலைவர் A. ஜமீர் பாஷா வி.களத்தூ கிளையின் தமுமுக மற்றும் மமக தலைவர் T.R.M சபியுல்லாஹ், செயலாளர் A. முஹம்மது ரபீக் பொருளாளர் S. முஹம்மது ஹாமீம் மேலும் A. முஹம்மது ஆரிப், B.ஜியாவுல் ஹக், B.சாகுல் ஹமீது, B. சிராஜ் தீன் மற்றும் திரளான தொண்டர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தி மற்றும் போட்டோஸ் - சாகுல்
















-vkalathurpost


இதயங்களுக்காக ஒரு குரல் - தமுமுக இயக்க பணிகள் விவரம் வினியோகம்

-vkalathurpost

தமுமுக வின் கோரிக்கை ஏற்று குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.



                     கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தமுமுகவின் மாணவர் இந்தியா கூட்டம் நடைப்பெற்றதை தெரிவித்து இருந்தோம். அதில் இயற்றிய தீர்மாணத்தின் படி தமுமுக வின் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. கொடுத்த மனுவை ஏற்று உடனடியாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமுமுகவின் கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கு தமுமுகவின் சார்பாக நன்றி கூறப்பட்டது. 
அசுத்தமாக இருந்த தண்ணீர் தொட்டி அதற்காக கொடுத்த மனுவும் கிழே உங்கள் பார்வைக்கு..




- vkalathurpost

தமுமுக வின் மாணவர் இந்தியா - துவக்கம்

                                       வி.களத்தூர் கிளையில்  தமுமுக வின் மாணவர் இந்தியா துவங்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு வி.களத்தூர் தமுமுக மற்றும் மமக வின் ஒருங்கிணைந்த கிளைத்தலைவர் எம். சபியுல்லாஹ், துணைத்தலைவர் கலீல் மாவட்ட மமக வின் துணைச் செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் இந்த மாணவர் இந்தியாவைப்பற்றி சொல்லப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு 30 மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

மேற்கண்ட கூட்டத்தில் மாணவர்களின் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் அவர்கள் கூறிய பிரச்சனைகளில் முக்கியமாக வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள குடி நீர் தொட்டியை சுத்தம் செய்ய சொல்வது என்றும் மாணவ மாணவிகளின் கழிப்பிட அறையில் தண்ணீர்  வசதிகளை செய்து தர  சொல்வது என்றும் மேலும் பெண்கள் நடுநிலைப்பள்ளியில் கழிப்பிட வசதி செய்து தர சொல்லி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

வி.களத்தூரின் மாணவர் இந்தியா பிரிவிற்கு செயலாளராக பி. சாகுல் ரியாஸ்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.















 
போட்டோஸ் மற்றும் செய்தி - சபி - கலீல்
 
- vkalathurpost

ரமலானே வருக.. வரவேற்ற தமுமுக

புனித ரமலானை வரவேற்ற வி.களத்தூர் கிளை தமுமுக







போட்டோஸ் - கலீல்
  -vkalathurpost

டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் - தினகரன் செய்தி

வேப்பந்தட்டை, ஜூலை 21:

                                      வி.களத்தூரில் பள்ளி மாணவர்களுக்கு இடை யூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தமுமுக வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவ ட்டம் வேப்பந்தட்டை அடுத்த வி.களத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி யின் செயல் வீரர்கள் கூட் டம் ஜக்கிரியா தலைமையில் நடைபெற்றது. தமுமுக மாவட்டச் செயலாளர் ரசீதுஅகமது, மமக மாவ ட்ட துணைச் செயலாளர் முகமது சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைத்தலைவர் சபியுல்லா, தமுமுக செயலாளர் சாகுல்அமீது, மமக செயலாளர் முகமதுரபீக், துணைச் செயலாளர் அப்துல்லா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் வி.களத்தூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடை யூறாக உள்ள டாஸ் மாக் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவ டி க்கை எடுக்க வேண்டும். வி.களத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் மின்பொறியாளரை நியமிக்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப்பள்ளியில் உருது ஆசிரியரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. மாணவரணி செயலாளர் சிராஜ்தீன், ஒன்றிய பொரு ளாளர் சாதிக்பாட்ஷா, ஜமீர்பாஷா, பாபு, ஜியாவுல்ஹக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

NANRI : DINAKARAN NEWS PAPER-21-7-12



வி.களத்தூர் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது கோரிக்கையின் நகல்




தகவல்- சை. பைஜுர் ரஹ்மான், கலீல்
 
- vkalathurpost

"முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து அனைத்து இயக்கங்கள் நடத்திய போராட்டத்தின் புகைப்படங்கள்



ஜமாத்துல் உலமா தலைவர் அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில்

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர் இஸ்மாயில்,

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M பாக்கர்,

த.மு.மு.க மூத்த தலைவர் ஹைதர் அலி,

SDPI தமிழ் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி,

இந்திய தேசிய லீக் இனாயதுல்லாஹ்,

தேசிய லீக் பசீர் அஹ்மத்,

சுன்னத்துவல் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர்,

மறு மலர்ச்சி முஸ்லிம் லீக் உமர் பாருக்,

வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சிக்கந்தர்,

ஆல் இந்தியா மில்லி கவுன்சில் அமீர் அலி,

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முஹம்மத் மன்சூர்,

இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் முஹம்மத் கான் பாக்கவி

மேலும் பல இயக்க தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியை முஹம்மத் ஹனிபா ஒருகிணைந்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தொண்டர்களும், பள்ளிவாசல் ஜமாத்தார்களும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 
 
புகைப்படங்கள்: